A Workshop for Representatives of Mothers’ Clubs

Faculty of Medicine > News > A Workshop for Representatives of Mothers’ Clubs

சங்கானைப் பிரதேசத் தாய்மார் கழகங்களின் பிரதிநிதிகளுக்கான செயலரங்கு கடந்த செவ்வாய்க்கிழமை (30.04.2024) அன்று மாலை 2 மணிமுதல் 4:30 மணிவரை சங்கானைச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வில் பன்னிரு தாய்மார்கள் கழகங்களைச் சேர்ந்த முப்பது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சங்கானைச் சுகாதார வைத்திய அதிகாரி Dr. யதுநந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை  சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத் துறையின் தலைவர் Dr. டினேஷ் கூன்ஜெ ஆரம்பித்து வைத்தார். 

தாய்மார்கள் கழகங்கங்களினால் உற்பத்தி செய்யப்படும் உணவுகளின் சந்தைத் தயார்நிலை மதிப்பீட்டினை மருத்துவர்கள் பிரபு, கிரிஷாந்தன் மற்றும் நவமாலினி ஆகியோர் மேற்கொண்டனர். தாய்மார்கள் கழகங்கங்களினால் உற்பத்தி செய்யப்படும் உணவுகளிற்கான சந்தை வாய்ப்பினை மேமப்படுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துகொண்ட பிரதிநிதிகள்,  பொது சுகாதார மருத்துவ மாதுக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான பணிகள் பற்றியும் உற்பத்தி, பொதியிடல் தரத்தினை மேம்படுத்துவதற்கான தேவை பற்றியும் கலந்துரையாடப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு எலுமிச்சைப் பானமும் முட்டைமாவும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து செயலமர்வு இனிதே நிறைவுற்றது.

A workshop for representatives of mothers’ clubs in the Sanguanai area was held at the Sanguanai Medical Officer of Health’s Office from 2 pm to 4:30 pm on Tuesday, April 30, 2024. The workshop was organised by the Department of Community and Family Medicine at the Faculty of Medicine, University of Jaffna. Thirty representatives from twelve mothers’ clubs participated in the workshop. The event was chaired by Dr. Yathunathan, Medical Officer of Health Changanai, and inaugurated by Dr. Dinesh Coonghe, Head of the Department of Community and Family Medicine.

Doctors Prabu, Krishanthan and Nawamalini conducted a market readiness assessment of the foods produced by the mothers’ clubs. Representatives of the mothers’ clubs and public health midwives shared their views on the challenges of improving the market potential for the traditional foods produced by the mothers’ clubs. Discussions were also held on possible future activities and the need to improve production and packaging standards. The workshop concluded with the distribution of lemon juice and multi-grain mix (a product of Kalvilan Mothers Club) to the participants.